திருக்குறள் (Thirukkural): குறள், தமிழ் உரைகள், மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு (with translation & transliteration) Buy on Amazon
Facebook LinkedIn

திருக்குறள் (Thirukkural): குறள், தமிழ் உரைகள், மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு (with translation & transliteration)

Author Vasudevan M
Publisher Vasudevan M
Price not available for France

You can still browse on Amazon. Try another country above.

Book Details
Author(s) Vasudevan M
Publisher Vasudevan M
ISBN / ASIN B014I5ERH4
ISBN-13 978B014I5ERH0
Marketplace France 🇫🇷
Description
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது. இந்நூ லை இயற்றியவர் திருவள்ளுவர்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
Donate to EbookNetworking
No Prev
No Next